News March 18, 2024
நாளை முதல் காங்கிரஸ் விருப்ப மனு

காங். சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நாளை (19.03.24) முதல் நாளை மறுநாள் (20.03.24) வரை விருப்ப மனு பெறப்பட உள்ளது. பொதுத்தொகுதிக்கு ₹30,000, தனித்தொகுதி, மகளிருக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ₹15,000, சட்டமன்ற தொகுதிக்கு ₹10,000 செலுத்தி மனுவை பெறலாம்.
Similar News
News November 25, 2025
14 வகை கேன்சரை அழிக்கும் ஒரே தடுப்பூசி!

ரஷ்யா உருவாக்கியுள்ள கேன்சர் தடுப்பூசியை முதல் நாடாக வியட்நாம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. Pembroria என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, 14 வகையான கேன்சரை அழிக்க உதவுவதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியின் விலையும் குறைவு என்பதால், பலர் இதன்மூலம் பயனடையலாம். இந்தியாவில் இந்த மருந்து தற்போது டெஸ்டிங்கில் உள்ளதால், கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 25, 2025
இன்னும் ஒரு மணி நேரத்தில்.. ரெடியா இருங்க

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கெட் (₹300) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அறைகளுக்கான முன்பதிவு மாலை 3 மணிக்கு தொடங்கும். ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
ராஜன் போன்ற கேரக்டரில் நடிக்கவுள்ளாரா VJS?

அரசன் படத்திற்கு அதிபயங்கர எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக யார் யார் இப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், அவர்களின் பசிக்கு தீனி போடும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. ‘வடசென்னையின் ராஜன்’ போல இவரது கேரக்டரும் நின்றுபேசும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


