News October 11, 2025
காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது: EPS

பல கட்சிகளுக்கு சென்று வந்தவரை மாநில தலைவராக்கி இருப்பதால் தான் காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டிருப்பதாக EPS விமர்சித்துள்ளார். விசுவாசமாக உழைத்தவர்களுக்கு எல்லாம் காங்கிரஸில் இடமில்லை என்றும் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பவரே மாநில தலைவர் பதவிக்கு வர முடிகிறதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுக பாஜக கூட்டணியை கண்டு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பதறுவது ஏன் என EPS கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News October 11, 2025
திமுக அரசுக்கு வேண்டியவரே DGP ஆக முடியுமா? EPS

DGP பட்டியலை மத்திய அரசு அனுப்பியும் இன்னும் திமுக அரசு நியமிக்கவில்லை; எப்படி சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களுக்கு யார் வேண்டியவரோ அவரது பெயர் வரும் வரை காத்திருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி DGP நியமனத்தை திமுக அரசு செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் எந்த திட்டமும் இல்லாமல் கடன் வாங்குவதாகவும் சாடியுள்ளார்.
News October 11, 2025
National Roundup : PM மோடியுடன் கேரள CM சந்திப்பு

*பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. *வயநாடு நிலச்சரிவுக்கு ₹2,221 கோடி நிதியை வழங்க வேண்டும் என PM மோடியிடம் கேரள CM பினராயி விஜயன் வலியுறுத்தல். *பிஹாரில், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த 2 ராஷ்டிரீய ஜனதா MLA-க்கள் ராஜினாமா. *ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரிய வழக்கில், 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு SC உத்தரவு.
News October 11, 2025
உடல் கொழுப்பு குறைய இந்த யோகாசனம் பண்ணுங்க!

திரிகோணாசனம் தொடை & வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு குறைய உதவும் *கால்களை இடையே 3-4 அடி இடைவேளைவிட்டு நேராக நிற்கவும் *வலது காலை முன் எடுத்து வைக்கவும் *குனிந்து இடது கையின் பின்பகுதியால் காலின் கீழ்பகுதியைத் தொடவும் *உடலை வளைத்து வலது கையை மேலே நீட்டவும் *இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும் *இதே போல, கால்களை மாற்றி செய்யவும். SHARE IT.