News December 19, 2024

காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை: எல்.முருகன்

image

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சி திரித்து பேசுவதாக எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பேத்கர் மரணத்துக்குப் பின்னர் கூட பாரத ரத்னா விருது தர காங்கிரஸ் மறுத்ததாக விமர்சித்த அவர், தங்கள் கட்சியை சார்ந்தவர்களுக்கு காங்கிரஸ் விருதுகளை வழங்கியதாகவும் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அவதூறுகளை மக்கள் நிச்சயம் புறந்தள்ளுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 5, 2026

விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு அரசு அறிவிப்பு

image

சனிப்பெயர்ச்சி (மார்ச் 6), வார விடுமுறை நாள்களையொட்டி நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல வேண்டுமா? உங்களுக்காகவே அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் இப்போதே டிக்கெட் புக் பண்ணுங்க!

News March 5, 2026

T20 WC: இந்திய அணி பேட்டிங்!

image

பெரும் பரபரப்புக்கிடையே வான்கடேவில் நடக்கும் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. இரண்டு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 5, 2026

தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் அறிவிப்பு

image

தவெகவில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் மாநில அளவிலான 11 நிர்வாகிகளை புதிதாக விஜய் நியமித்துள்ளார். அந்த வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் மகளிர் படையின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!