News March 18, 2024
காங்கிரஸ் கட்சி உத்தேச பட்டியல்

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸூக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1) குமரி- விஜய் வசந்த், 2) விருதுநகர்- மாணிக்கம் தாகூர், 3) சிவகங்கை – கார்த்திக், 4) கரூர் – ஜோதிமணி, 5) திருவள்ளுர்- சசிகாந்த் & விஸ்வநாதன், 6) மயிலாடுதுறை- பிரவின் சக்ரவர்த்தி , 7) கிருஷ்ணகிரி – செல்லகுமார், 8) கடலூர்- அழகிரி, 9) நெல்லை- பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.
Similar News
News September 5, 2025
வெள்ளிக்கிழமையில் துர்க்கையின் அருளை பெற

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
பொருள்:
காத்யாயனியின்(மகாதேவி) மகள் தெய்வத்தை நான் தியானிக்கிறேன்!
ஓ, துர்கா தேவி எனக்கு உயர்ந்த புத்தியைக் கொடுத்தார்!
என் மனதை ஒளிரச் செய்வாயாக! SHARE IT.
News September 5, 2025
FB, Insta உள்பட 26 செயலிகளுக்கு தடை

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், X உள்பட 26 சோஷியல் மீடியா செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. சோஷியல் மீடியாக்கள், சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுவதை நோக்கமாக கொண்டு சமீபத்தில் அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை இயற்றியது. இதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசிடம் முறையாக பதிவு செய்யாத செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், டிக்டாக் செயலி பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு தடை இல்லை.
News September 5, 2025
தாக்கம் வேறு, ஆட்சி வேறு; அண்ணாமலை சாடல்

விஜய்க்கு மாஸ் இருக்கிறது, எனவே அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அதேநேரம், தாக்கம் என்பது வேறு, ஆட்சி அமைப்பது வேறு என்றும், அதிமுக – பாஜக கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் எனவும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். TTV தினகரன், பிரேமலதா உள்ளிட்டோர், வரவிருக்கும் 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியிருந்தனர்.