News October 13, 2025

ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி

image

ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை பற்றிய ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. கட்சியின் முக்கியமான தலைவராக இருக்கும் தாங்கள், இக்கருத்தை தவிர்த்திருக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை இந்திராகாந்தி நடத்தியது தவறு என்றும், அதனால்தான் அவரது உயிர் போய்விட்டது எனவும் ப.சிதம்பரம் நேற்று பேசியிருந்தார்.

Similar News

News October 13, 2025

எப்பவும் சோர்வா இருக்கா? இத கவனிங்க முதல்ல!

image

நன்றாக தூங்கி எழுந்தாலும், அடிக்கடி சோர்வாக இருப்பதாக தோன்றுகிறதா? அப்படி இருந்தால் நமது உடலில் ஏதேனும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்று அர்த்தம். முக்கியமாக இரும்புச்சத்து, வைட்டமின் D, வைட்டமின் B12, மக்னீசியம், வைட்டமின் B9 ஆகியவை குறைவாக இருந்தால் அதிக சோர்வு, தசைப்பிடிப்பு, மனநிலை மாற்றங்கள் ஏற்படும். எனவே, உடனே டாக்டரை அணுகி, குறைபாட்டை அறிந்து, சரியான உணவு முறையை பின்பற்றுங்க.

News October 13, 2025

அரசியல் வெற்றியா? துயரில் துவள்பவர்களுக்கான நீதியா?

image

கரூர் துயரம், திமுக அரசின் சதி என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டால் ‘Stand with Viay’ என்று ஒரு கூட்டம் கிளம்பியது. இந்த சமயத்தில் அரசியல் பேசாமல், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்க வேண்டும் என்று ‘Stand with victims’ என்றும் நெட்டிசன்கள் குரல் எழுப்பினர். இந்நிலையில், CBI விசாரணைக்கு மாற்றம் என்ற SC-ன் தீர்ப்பு தவெகவிற்கு கிடைத்த வெற்றி என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த தீர்ப்பு யாருக்கு வெற்றி?

News October 13, 2025

பாலய்யா டீமுக்கு ₹3 கோடி கொடுத்ததா ஜனநாயகன் குழு?

image

ஆரம்பத்தில் இருந்தே ‘ஜனநாயகன்’ படம் ‘பகவந்த் கேசரியின்’ ரீமேக் என கூறப்பட்டது. இந்நிலையில், அப்படத்தின் கதை உரிமைக்காக ஜனநாயகன் படக்குழு ₹3 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாலய்யாவின் பட ரீமேக்கை தான் H வினோத் எடுத்துள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் வெளியீடாக ரிலீஸாகிறது.

error: Content is protected !!