News May 25, 2024

திமுக மீது காங்கிரஸ் அதிருப்தி?

image

திமுக மேலிடத்துக்கு நெருக்கமான ஒருவரை பிரசாந்த் கிஷோர் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக தனி மெஜாரிட்டி பெறவில்லையெனில், அக்கட்சி மத்தியில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறியதாகவும், இதற்கு தேர்தல் முடிவுக்கு பிறகு பார்க்கலாம் என திமுக தரப்பில் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தெரியவர திமுக மீது காங்கிரஸ் கட்சி தற்போது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Similar News

News March 10, 2026

LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

image

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வணிக <<19341813>>சிலிண்டர் <<>>விநியோகம் தடைபட்டதால், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, முழுமையாக வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 10, 2026

சனி தொல்லையை நீக்கும் வெற்றிலை பரிகாரம்!

image

சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வெற்றிலை வழிபாடு உதவும். ஒரு தட்டில் 2 வெற்றிலை, 3 பாக்குகள், 11 நாணயங்களை வைக்கவும். அதன் முன், நெய்யில் தீபம் ஏற்றி வையுங்கள். இயன்ற ஒரு பொருளை நைவேத்தியமாக படைக்கவும். வடக்கு திசை பார்த்தவாறு ‘ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமியில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். SHARE IT.

News March 10, 2026

விஜய்க்கு அழைப்பு.. அதிரடியாக நீக்கிய நயினார்

image

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!