News May 2, 2024
சாதி, மொழி அடிப்படையில் மக்களைப் பிரிக்க காங்., முயற்சி

ஆங்கிலேயர்களின் பாரம்பரியத்தை மேம்படுத்த காங்., பாடுபடுவதாக யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி, மொழி, பிராந்தியத்தின் அடிப்படையில் காங்., சமூகத்தைப் பிரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார். அதனால்தான், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க முயற்சிப்பதாகக் காங்கிரசை அவர் விமர்சித்தார்.
Similar News
News August 29, 2025
ஜாக்கி சானை இயக்க ஆசை: பிரதீப் ரங்கநாதன்

‘LIK’ பட டீஸருக்கு கிடைத்த வரவேற்பில் உற்சாகத்தின் உச்சியில் உள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதனிடையே அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஜாக்கி சானை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குவதே தனது கனவு என தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட நெட்டிசன்கள், ‘அப்போ அவரும் ரொமான்டிக் காமெடி பண்ணுவாரா’ என கேட்டு வருகின்றனர். ‘DUDE’ படமும் ரிலீஸ் லிஸ்ட்டில் உள்ளதால், பிரதீப் புரமோஷன் பணிகளில் பிஸியாகியுள்ளார்.
News August 29, 2025
அண்ணாமலை பேசினாலே போதும்: செல்லூர் ராஜு

உயிரை கொடுத்து உழைத்தாவது EPS-ஐ அரியணையில் அமர வைப்போம் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம், பாஜகவினருக்கு அவர் கட்டளையிட்டாலே 2026-ல் EPS முதல்வராவார் என செல்லூர் ராஜு கூறியுள்ளார். அண்ணாமலையாலேயே கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்ததாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் இணைந்த பிறகு EPS-ஐ அண்ணாமலை உயர்த்தி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
News August 29, 2025
விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. PHOTO ❤️

விஷால்- சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் விஷாலின் வீட்டில், இரு வீட்டார் & நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள நிச்சயம் நடந்தது. தன் பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர்களுக்கு X-ல் நன்றி சொன்ன விஷால், திருமண நிச்சயதார்த்த போட்டோவையும் அத்துடன் பகிர்ந்துள்ளார். வாழ்த்துகள் விஷால்- சாய் தன்ஷிகா!