News March 19, 2024
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ளதாக காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெறும் காங்., செயற்குழு கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் வெளியிடப்படும் என்றார். கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான வாக்குறுதிகள் குறித்து விவாதிக்க உள்ளதாகத் தெரிகிறது.
Similar News
News October 31, 2025
திமுகவில் இணைந்தனர்…

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. 2011, 2016, 2021 என தொடர்ந்து இத்தொகுதியில் EPS-ன் வலது கையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வெற்றி பெற்று வருகிறார். இதனால், இந்த தொகுதியை கைப்பற்றும் பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் திமுக ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
News October 31, 2025
ஸ்டாலினை சீரியஸாக எடுக்க வேண்டாம்: கவுதமி

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என CM ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி பேசியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அவர், அப்போதுதான் மக்களை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தைக் காப்பாற்ற இபிஎஸ் தலைமையிலான அதிமுகதான் சரியான தேர்வு எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News October 31, 2025
பாகுபலி 3 எடுக்க இவ்ளோ பட்ஜெட்டா?

‘பாகுபலி: தி எடர்னல் வார்’ படத்திற்கான பட்ஜெட் ₹120 கோடி என ராஜமௌலி அறிவித்துள்ளார். பாகுபலி 1-ம் கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில்தான் எடுக்கப்பட்டது. அனிமேஷனில் உருவாகும் இப்படம் 2027-ல் வெளியாகலாம். இந்நிலையில், இன்று வெளியாகும் ‘பாகுபலி: தி எபிக்’ படத்தின் இடைவேளையில் ‘தி எடர்னல் வார்’ படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


