News May 19, 2024
அம்பேத்கருக்கு காங்கிரஸ் மரியாதை அளிக்கவில்லை

காங்கிரஸ் ஆட்சியில், இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் உருவாக்கிய இடஒதுக்கீடு முறையை மத்திய பாஜக அரசு பின்பற்றி வருகிறது. அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. என்.டி.ஏ அரசு அம்பேத்கர் வகுத்த பாதையில் பயணிக்கிறது” எனக் கூறினார்.
Similar News
News September 13, 2025
கூச்சல், கும்மாளம்: விஜய்யை அட்டாக் செய்த CM ஸ்டாலின்

விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திருச்சியே திண்டாடிபோயுள்ளது. இந்நிலையில், கொள்கையில்லா கூட்டத்தைச் சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என CM ஸ்டாலின் விஜய்யை சாடியுள்ளார். திமுக முப்பெரும் விழாவுக்காக தொண்டர்களுக்கு அழைப்பு மடல் எழுதிய அவர், பழைய எதிரிகள்-புதிய எதிரிகள் என எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டு பார்க்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 13, 2025
உலக தடகள சாம்பியன்ஷிப்: மெடல் குவிக்குமா இந்தியா?

உலக தடகள சாம்பியன்ஷிப், ஜப்பானின் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்.21 வரை நடைபெறும் இந்த தொடரில் 198 நாடுகளைச் சேர்ந்த 2,200 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து நீரஜ் சோப்ரா, முரளி ஸ்ரீசங்கர், குல்வீர் சிங், அங்கிதா தியானி, பூஜா உள்பட 19 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பதக்கங்கள் குவிக்க வாழ்த்துகள்!
News September 13, 2025
‘MLA திருட்டு’ பற்றி ராகுல் வாய் திறப்பாரா? ராமா ராவ் கேள்வி

வாக்கு திருட்டை பற்றி பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் BRS கட்சியிலிருந்து காங்., கட்சி, MLA-க்களை திருடுவது பற்றி மௌனம் காப்பது ஏன் என கே.டி. ராமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், மக்கள் பிரச்னைகளை காட்டிலும் MLA-க்களை திருடுவதில் தான் மாநில காங்., அதிக கவனம் செலுத்துவதாகவும் சாடியுள்ளார்.