News March 18, 2024
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் போட்டி

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் ஞானதிரவியம் வெற்றிபெற்றார்.
Similar News
News December 3, 2025
நெல்லை: GAS சிலிண்டர் புக்கிங் செய்ய புதிய அறிவிப்பு!

நெல்லை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 3, 2025
நெல்லை: டூவீலர் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

கோபாலசமுத்திரம் பெருமாள் சன்னதி தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் (65) .
நேற்று முன்தினம் மாலை மொபெட்டில் பணிக்கு சென்ற போது தடுமாறி கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். கல்லூரி ஊழியர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
News December 3, 2025
நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தேனி, தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


