News March 18, 2024

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் போட்டி

image

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக சார்பில் ராமலிங்கம் வெற்றி பெற்றார்.

Similar News

News August 8, 2025

மயிலாடுதுறை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை!

image

மயிலாடுதுறை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணபிக்கலாம். SHARE IT NOW…

News August 8, 2025

சீர்காழியில் மாணவர்களுக்கான மேடைப் பேச்சு பயிற்சி முகாம்

image

மாணவ பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஜே.சி.ஐ சீர்காழி கிரீன் சிட்டி சார்பில் மேடைப்பேச்சு பயிற்சி முகாம் நாளை சனிக்கிழமை சீர்காழி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. சிறந்த பேச்சுத் திறன் கொண்ட பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

கடைமடை பகுதியில் சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

image

கொள்ளிடம் பகுதியில் பிரதான புதுமண்ணியாறு தெற்கு ராஜன் வாய்க்கால் மற்றும் பொறை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேர்ந்துள்ளதா என சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மயிலாடுதுறை கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.

error: Content is protected !!