News May 29, 2024
காந்தி தொடர்பான மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

காந்தி தொடர்பான மோடியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். காந்தி படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்துள்ளார் என்று உலகில் பலருக்கு தெரிந்தது என பேட்டி ஒன்றில் மோடி கூறியிருந்தார். காந்தி படம் 1982இல் வெளியானது என்றும், 1930ஆம் ஆண்டிலேயே தண்டி யாத்திரை மூலம் காந்தி உலகறிந்த தலைவராக திகழ்ந்தார் என காங்கிரஸார் மோடிக்கு பதிலடி தந்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
கனவில் பாம்பு வருதா? இதுதான் அர்த்தம்

சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு தசை, கேது தசை நடக்கும்போது, அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?
News November 26, 2025
இந்தியாவில் காமன்வெல்த்: களைகட்ட போகும் அகமதாபாத்

2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010- ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு ஏற்றார் போன்ற உலகத்தரம் வாய்ந்த மைதானங்கள் அகமதாபாத்தில் உள்ளன. இந்தியாவின் விளையாட்டுத்துறை புதிய உச்சத்தை தொட இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 26, 2025
பிரபல ராப் பாடகர் வேடனுக்கு தீவிர சிகிச்சை

உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல ராப் பாடகர் வேடனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையே டிச.12-ம் தேதி கத்தாரில் நடக்க இருந்த அவரது இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ், நரிவேட்டை உள்ளிட்ட படங்களில் பாடி பிரபலமான அவர், தமிழில் பைசன் படத்தில் பாடியுள்ளார்.


