News March 28, 2024

கங்கனாவை விமர்சித்த காங்கிரஸ் வேட்பாளர் நீக்கம்

image

பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்தை விமர்சித்தவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து காங்கிரஸ் நீக்கியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்வை அக்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கங்கனாவை விமர்சித்து அவர் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாக கூறி கண்டனம் எழவே, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் வேட்பாளர் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

Similar News

News September 18, 2025

கள்ளக்குறிச்சி: 65 ஏரிகளில் மீன்பிடி குத்தகை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 65 ஏரிகளில் மீன்பிடிப்பதிற்கான குத்தகைக்கு மின்னணு ஒப்பந்த புள்ளி ஏலம் நடக்க உள்ளது. சங்கராபுரம் வட்டத்தில் மஞ்சப்புத்துார், தண்டலை, பூட்டை ஆகிய 3 ஏரிகளும், வாணாபுரம் வட்டத்தில் அரியலுார், அத்தியூர் ரிஷிவந்தியம் ஆகிய 13 ஏரிகள் என மொத்தம் 65 ஏரிகளில் மீன் பிடிப்பதிற்கான குத்தகை ஏல http://www.tntenders.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

News September 18, 2025

விஜய்யை எதிர்த்தால் திமுகவின் கைக்கூலியா? சீமான்

image

அனைத்து கட்சிகளையும் தான் பாரபட்சமின்றி விமர்சித்து வருவதாக சீமான் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், விஜய்யை எதிர்த்தால் திமுக கைக்கூலி, திமுகவை எதிர்த்தால் RSS கைக்கூலி என மாறி மாறி தன்னை விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், திமுக தேர்தலில் தனித்து நிற்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 18, 2025

தள்ளிப்போகும் ரஜினி, கமல் படம்

image

ரஜினி, கமல் இணைந்து நடிக்கவுள்ள படம் மீதான எதிர்பார்ப்பே கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. இந்நிலையில், ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ஆகியோரது இயக்கத்திலேயே கமல் முதலில் நடிக்கவுள்ளாராம். இதன்பிறகே கமல், ரஜினி இருவரும் நடிக்கும் படம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் இயக்குநர், சரியான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறவுள்ளதாம்.

error: Content is protected !!