News March 25, 2024
நெல்லை வேட்பாளரை இன்று அறிவிக்கிறது காங்.,

மயிலாடுதுறை, நெல்லை மற்றும் விளவங்கோடு (இடைத்தேர்தல்) உள்ளிட்ட 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்., இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் பாஜக சார்பில் நயினார் போட்டியிடுவதால், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சரியான நபரை காங்., தேர்வு செய்துள்ளதாம். நெல்லையில் ஸ்டாலின் இன்று மாலை தேர்தல் பரப்புரையை மேற்கொள்வதால், அதற்குள் வேட்பாளர் பெயர் வெளியாக வாய்ப்புள்ளது.
Similar News
News January 19, 2026
கண்கள் அடிக்கடி அரிக்கிறதா? இத கவனிங்க!

காலநிலை மாற்றம், தொற்று கிருமிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் அரிப்பு, எரிச்சலை தடுக்க சில இயற்கை டிப்ஸ்: *ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து கண்கள் மீது ஒத்தடம் கொடுக்கலாம். *பாலை துணியில் நனைத்து கண்களை துடைத்து வரலாம் *வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மீது வைக்கலாம் *வெந்நீரில் உப்பு கலந்து, துணியில் நனைத்து கண்கள் மீது வைக்கலாம் *தொற்று அதிகம் இருந்தால் டாக்டரை அணுகுங்கள்.
News January 19, 2026
எந்த கட்சிக்கும் அடிபணியாமல் எடுத்த முடிவு: பிரவீன்

TN காங்கிரஸில் நீண்ட இழுபறிக்கு பிறகு <<18894402>>71 மாவட்ட<<>> தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரவீன் சக்ரவர்த்தி, மற்ற எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், சுயமரியாதை & தன்னாபிமானத்துடன் ஒவ்வொருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும், காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹2,000.. CM ஸ்டாலின் அறிவிக்கிறார்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை (KMUT) ₹2,000 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வரும் பேரவை கூட்டத்தொடரில் CM ஸ்டாலின் அறிவிக்கவிருந்தார். அதனை அறிந்து கொண்ட அதிமுக ரேஸில் முந்திக்கொண்டு தனது தேர்தல் அறிக்கையில் <<18879658>>’குல விளக்கு’ திட்டமாக<<>> அறிவித்துள்ளதாம். ஏற்கெனவே மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


