News September 28, 2025
கரூர் துயரத்திற்கு காங்கிரஸ் சார்பில் ₹1 கோடி நிவாரணம்

கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு TNCC தலைவர் செல்வப்பெருந்தகை, MP ஜோதிமணி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ₹1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும், துக்கம் அனுசரிக்கும் விதமாக காங்., கட்சி 3 நாள்களுக்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது.
Similar News
News September 28, 2025
FLASH: அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். முன்னதாக, விஜய் பிரசாரம் செய்த இடத்தை சுற்றியுள்ள கடைகள், வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 110 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
News September 28, 2025
விஜய் பிரசாரத்தில் மின்தடை இல்லை: மின்சார வாரியம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதாக மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். சிலர் மின்சார வயர்களுக்கு அருகில் உள்ள மரங்களின் மீது ஏறியிருந்ததால் சில நிமிடங்கள் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, அவர்களை அப்புறப்படுத்திய பிறகு உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். முன்னதாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
News September 28, 2025
கரூர் துயரம்: 40 பேர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

கரூரில் கூட்ட நெரிசல் மரணங்களை, இதற்குமுன் நடந்த நெரிசல் மரணங்களுடன் ஒப்பிட்டு SM-ல் கேள்வி எழுப்பப்படுகிறது. *பெங்களூரு RCB கொண்டாட்டத்தில் 2.5 லட்சம் பேர் கூடினர்; உயிரிழப்பு 11 பேர். *சென்னை ஏர் ஷோவில் 15 லட்சம் பேர் கூடினர்; 5 பேர் பலி. *1992-ல் மகாமகத்தில் 5 லட்சம் பேர் கூடினர்; 50 பேர் பலி. *கரூரில் 27,000 பேர் மட்டுமே கூடினர்; 40 பேர் பலி. இந்த அளவுக்கு பலி எண்ணிக்கை உயரக் காரணம் என்ன?