News March 25, 2024
வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

நீண்ட இழுபறிக்கு பின்னர் நெல்லை மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில், காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதுவரை 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தாரகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
Similar News
News December 26, 2025
விஜய்க்கு விஜய் வசந்த் பதிலடி!

யார் தீய சக்தி, தூய சக்தி என்பது 2026 தேர்தலில் தெரியும் என காங்கிரஸ் MP விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த், களத்திற்கு வரும் புதிய கட்சி ஆளுங்கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் பல நல்ல திட்டங்களை CM கொண்டு வந்துள்ளார். எனவே எங்கள் கூட்டணியே வெல்லும் என்றார். முன்னதாக திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி என விஜய் ஈரோட்டில் பேசியிருந்தார்.
News December 26, 2025
விடுதலையாகும் சவுக்கு சங்கர்

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்த மெட்ராஸ் HC, புகாரளிக்கப்பட்ட அடுத்த நாளே கைது செய்ததன் நோக்கம் குறித்து போலீஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தனிநபரை கைது செய்ய முழு அதிகாரத்தையும் போலீஸ் பயன்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கோர்ட் கூறியுள்ளது. விசாரணை அதிகாரியிடம் பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News December 26, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள், மேல்முறையீடு செய்து வருகின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான ஆய்வுப் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதில், உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால், குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, மாதந்தோறும் 15-ம் தேதி உங்களது வங்கிக் கணக்கிலும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். SHARE


