News April 8, 2024

ராமர் கோயில் கட்டியதால் காங்கிரஸ் கோபம்

image

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதால் காங்கிரஸ், I.N.D.I.A கூட்டணி கடும் கோபத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் பஸ்தரில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘மக்களின் 500 ஆண்டு கனவு நனவாகியுள்ளது. ஆனால் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை அழைப்பிதழை காங்கிரஸ் நிராகரித்தது மட்டுமின்றி, அதை தவறு என கூறிய காங்கிரஸ் தலைவர்களையும் அக்கட்சியில் இருந்தே நீக்கியது’ என்றார்.

Similar News

News April 7, 2026

சிக்கனில் இந்த பாகங்களை சாப்பிடாதீங்க!

image

கோழி ஒரு நல்ல புரதச்சத்து நிறைந்த உணவு. இருப்பினும், அதில் சில பாகங்களை உண்பதை தவிர்ப்பது சில நோய்கள் வருவதை தடுக்க உதவும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். ➤கொழுப்பு மட்டுமே உள்ள தோல், மற்றும் பாக்டீரியாக்கள் வாழும் இடங்களான கழுத்து, தலை, நுரையீரல், இரைப்பை, கால்கள், வால் பாகங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ➤இவை செரிமான பிரச்னை ➤நோய் தொற்றுகளையும் ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். SHARE.

News April 7, 2026

மாணவர்களுக்கு ₹25,000 வரை கொடுக்கும் அரசு திட்டம்

image

பழங்குடியினர் தொடர்பான ஆய்வு & ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்குகிறது தொல்குடியினர் புத்தாய்வு திட்டம். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE.

News April 7, 2026

ஒரே தொகுதியில் 95.5% முஸ்லீம் வாக்காளர்கள் நீக்கம்

image

மேற்குவங்க CM மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் SIR-க்கு பிறகு 95.5% முஸ்லீம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மம்தா, SIR-க்கு எதிரான குரல் தேர்தல் முடிவில் தெரியும் என கூறியுள்ளார். அதேபோல், SIR பணிகளால் நியாயமான தேர்தல் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் மம்தா உள்ளார் என அவரை எதிர்த்து களமாடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!