News June 5, 2024
இடைத்தேர்தலிலும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்த காங்கிரஸ்

நாடு முழுவதும் 23 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் பாஜகவுக்கு, காங்கிரஸ் கூட்டணி பெரும் சவாலாக இருந்துள்ளது. குஜராத்தில் தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளிலும் வென்ற பாஜக, ஹிமாச்சல் பிரதேசம், மே.வங்கம், உ.பி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் சறுக்கியது. பாஜக 10, காங்கிரஸ் 7, சமாஜ்வாதி 2, திரிணாமுல் காங்கிரஸ் 2, சிபிஎம் 1, பாரதிய ஆதிவாதி கட்சி 1 தொகுதிகளிலும் வென்றன.
Similar News
News April 3, 2026
காங்., 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

நாங்குநேரி – ரூபி மனோகரன், குளச்சல்- தாரகை கத்பர்ட், விளவங்கோடு – டி.டி.பிரவீன், ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன், உதகை – ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் – சூரியபிரகாஷ், சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு, மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது, அறந்தாங்கி – ராமச்சந்திரன், காரைக்குடி – மாங்குடி, சங்கரன்கோவில் – சங்கை கணேசன், அம்பாசமுத்திரம் – வி.பி.துரை ஆகியோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்.7 முதல் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.6 (திங்கள்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகள் இயங்காது என கல்வித் துறை தெரிவித்துள்ளது. SHARE IT
News April 3, 2026
ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் ECI: வீரபாண்டியன்

மத்திய அரசின் தலையீட்டால் தமிழ்நாடு டிஜிபி மாற்றப்பட்டுள்ளதாக CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக ECI செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என அவர் சாடியுள்ளார். இத்தகைய பாரபட்சமான போக்கை கைவிட்டுவிட்டு, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதை ECI தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.. <<-se>>#TNElection2026<<>>


