News May 2, 2024
பாகிஸ்தானுடனான காங்கிரஸ் கூட்டணி அம்பலமாகி விட்டது

பாகிஸ்தானுடனான காங்கிரஸ் கூட்டணி அம்பலமாகி விட்டதாக மோடி விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுதரி, ராகுல் காந்தியைப் புகழ்ந்து பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ள மோடி, இந்தியாவில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்து வருவதைக் கண்டு பாகிஸ்தான் அழுவதாகத் தெரிவித்தார். இளவரசர் (ராகுல் காந்தி) பிரதமராக வேண்டுமெனப் பாகிஸ்தானில் தொழுகை நடத்தப்பட்டதாகவும் மோடி கூறினார்.
Similar News
News March 20, 2026
உலக தடகள வரலாற்றில் கால்பதிக்கும் இந்தியா

2028 உலக உள்ளரங்க தடகளப் போட்டிகளை நடத்தும் உரிமையை முதல்முறையாக இந்தியா பெற்றுள்ளது. இதற்காக இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய நிலையில், பலகட்ட ஆய்வுக்கு பிறகு, ஒடிசாவின் புவனேஸ்வர் தேர்வானது. இதன்மூலம் ஜப்பான், கத்தார் & சீனாவை அடுத்து இப்போட்டியை நடத்தும் ஆசியாவின் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக உள்ளரங்க தடகள போட்டிகளில் இந்தியா இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை.
News March 20, 2026
என்னப்பா இது விசிலுக்கு வந்த சோதனை..

கோவையில் ECI சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மாணவிகள் நடனமாடியபோது, ஒரு மாணவி விசில் ஊதினார். உடனடியாக தேர்தல் அதிகாரி ஒருவர் விசிலை மேடையிலேயே பிடுங்கினார். இது தேர்தல் நடவடிக்கையே என அதிகாரிகள் கூறினர். ஆனால், தொடக்கம் முதலே மத்திய, மாநில அரசுகளால் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு இடையூறு ஏற்படுவதாக தவெகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
News March 20, 2026
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே, அரியலூர், திருவாரூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதலே சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழையா?


