News March 18, 2024

புதுச்சேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ்

image

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக வி.வைத்திலிங்கம் போட்டியிடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

Similar News

News October 25, 2025

புதுச்சேரி: ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

மதராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் சார்பில், அரசு நிறுவனங்களிலும், தனியார் துறையிலும் ஊழல் தடுப்பு, வெளிப்படைத் தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள செண்பகா ஓட்டலில் நேற்று நடந்தது. உணவு பிரிவு போலீஸ் எஸ்.பி. மாறன், ஊழல் எப்படி பொதுமக்களின் உரிமைகளை பாதிக்கிறது என்பதை விளக்கி பேசினார்.

News October 25, 2025

புதுச்சேரி: மாணவர் தூக்கிட்டு தற்கொலை

image

புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பேட், திருப்பூர் குமரன் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திகேயன், கிருமாம்பாக்கததில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அடிக்கடி மொபைல் போன் பார்த்து வந்தார். இதனால் அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News October 25, 2025

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை!

image

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “வடகிழக்கு பருவமழையால் புதுவையில் மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் அடுத்த 15 நாட்களுக்குள் அதிக மழையுடன் சுமார் 55 கி.மீ வேகத்தில் 2 புயல்கள் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அனைத்துவிதமான பேனர், கட்-அவுட் வைக்க வரும் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.” என அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!