News August 14, 2024
விக்ரமுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்: தனுஷ்

‘தங்கலான்’ படக்குழுவுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், நாளை உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், தான் அறிந்தவர்களில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர்களில் ஒருவரான விக்ரமுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 4, 2025
தஞ்சை: கண்டுப்பிடிக்கப்பட்ட சிறுமியின் உடல்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சரகத்திற்குட்பட்ட பந்தநல்லூர் பகுதி அருகே புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் காணாமல் போனதாக உறவினர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் புதைத்த உடல் அதே இடத்தில் இருந்தது தெரியவந்தது.
News December 4, 2025
புயல் அலர்ட் 20 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலூர், கோவை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கை, சேலம், நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையிலும் மழை பெய்து வருகிறது.
News December 4, 2025
மோடி அரசே ரூபாய் மதிப்பு குறைவுக்கு காரணம்: கார்கே

மத்திய அரசின் கொள்கைகளே ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் திட்டங்கள் சரியானதாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். 2014-ல் குஜராத் CM-ஆக இருந்த மோடி, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காங்கிரஸை குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி, இப்போது நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என PM-யிடம் கார்கே கேட்டுள்ளார்.


