News April 26, 2024
தங்கை நேத்ரா குமணன் மகுடம் சூட வாழ்த்துகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்கை நேத்ரா குமணன் 2ஆவது முறையாக இந்தியா சார்பில் களம் காண்பது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப் போட்டிக்குத் தேர்வான முதல் பெண்மணியான அவர், மகுடம் சூட வாழ்த்தியுள்ளார்.
Similar News
News September 18, 2025
WA: நீரஜ் ஏமாற்றம்… பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது

உலக தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார். இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 84.03மீ ஈட்டி எறிந்து 8வது இடம் பிடித்தார். ஒரு முறை கூட அவர் 85மீ தாண்டி ஈட்டி எறியவில்லை. கடந்த முறை தங்கம் வென்றிருந்த நீரஜ், இம்முறை பதக்கமின்றி திரும்புவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் 10வது இடமே பிடித்தார்.
News September 18, 2025
ராகுல் போலி கதைகளை பரப்புகிறார்: அமித்ஷா

வாக்கு திருட்டு குறித்து பொய்யான கதையையே ராகுல் பரப்பி வருவதாக அமித்ஷா சாடியுள்ளார். பிஹாரில் பேசிய அவர், ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த காங்கிரஸாரும், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களை காப்பாற்றும் வேலையிலேயே ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், இந்திய இளைஞர்களுக்கு பதில், ஊடுருவல்காரர்களுக்கு ராகுல் வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News September 18, 2025
விஜய்யை எதிர்த்தால் திமுகவின் கைக்கூலியா? சீமான்

அனைத்து கட்சிகளையும் தான் பாரபட்சமின்றி விமர்சித்து வருவதாக சீமான் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், விஜய்யை எதிர்த்தால் திமுக கைக்கூலி, திமுகவை எதிர்த்தால் RSS கைக்கூலி என மாறி மாறி தன்னை விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், திமுக தேர்தலில் தனித்து நிற்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.