News December 12, 2024

சூப்பர் ஸ்டாருக்கு லேடி சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

image

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், உலகிலேயே மிகவும் இனிமையான மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் தனியொருவர். எங்களை தினமும் இன்ஸ்பைர் செய்பவர். உங்களது பிறந்தநாள் எங்களை போன்ற கோடிக்கணக்கானோருக்கு கொண்டாட்டம். உங்களுக்கு தேவையான அனைத்தையும் கடவுள் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 10, 2026

திண்டுக்கல் அருகே அதிரடி கைது!

image

திண்டுக்கல், நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த வள்ளி, விராலிமலையை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் நத்தம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News March 10, 2026

சனி தொல்லையை நீக்கும் வெற்றிலை பரிகாரம்!

image

சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வெற்றிலை வழிபாடு உதவும். ஒரு தட்டில் 2 வெற்றிலை, 3 பாக்குகள், 11 நாணயங்களை வைக்கவும். அதன் முன், நெய்யில் தீபம் ஏற்றி வையுங்கள். இயன்ற ஒரு பொருளை நைவேத்தியமாக படைக்கவும். வடக்கு திசை பார்த்தவாறு ‘ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமியில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். SHARE IT.

News March 10, 2026

விஜய்க்கு அழைப்பு.. அதிரடியாக நீக்கிய நயினார்

image

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!