News August 3, 2024
ஒரு மாத சம்பளத்தை கொடுக்கும் காங்., MLA.,க்கள்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக தமிழக காங்., எம்எல்ஏ.,க்கள் 18 பெரும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருபவர்களுக்கு காங்., சார்பாக வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
கடலூர்: சொந்த தொழில் சூப்பர் வாய்ப்பு!

கடலூர், இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்: EPS

திமுக தலைவர்கள் அதிமுகவை விமர்சிப்பது கேலிக்கூத்தாக உள்ளது என EPS கூறியுள்ளார். பல தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற அதிமுகவை பற்றி தெரியாமல் CM பேசுவதாக கூறிய அவர், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என சூளுரைத்தார். மேலும், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததை பற்றி மட்டுமே விமர்சிக்க முடியுமே தவிர, தங்கள் ஆட்சியில் எந்த குறையும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
நீட்டை ரத்து செய்யாததை கண்டித்து அதிமுக தீர்மானம்

அதிமுக கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ➤பேரிடர்களின் போது மக்களை பாதுகாப்பதில் தோல்வியடையும் TN அரசுக்கு கண்டனம் ➤அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆமை வேகம் காட்டுவதாக கண்டனம் ➤கோதாவரி-காவிரி இணைப்பில் அக்கறை இல்லை என கண்டனம் ➤நீட் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு மானியம் ஆகிய வாக்குறுதிகளை காப்பாற்றாததற்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


