News May 20, 2024
அமைச்சர் ரகுபதியால் அதிமுகவில் குழப்பம்

செங்கோட்டையன் விரைவில் அதிமுக பொதுச் செயலாளராக போவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்மையில் தெரிவித்திருந்தார். திமுகவில் சேரும் முன்பு அதிமுகவில் ரகுபதி இருந்ததால், அவரது இந்த பேட்டியில் உண்மை இருக்குமோ என்ற குழப்பம் அதிமுகவினருக்கு ஏற்பட்டது. இதையடுத்தே ஜெயக்குமார், செல்லூர் ராஜு போன்றோர், இபிஎஸ் தலைமையில் அதிமுக ஒற்றுமையாகவும், வலுவாகவும் இருப்பதாக பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.
Similar News
News November 19, 2025
இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும் : PM மோடி

இயற்கை விவசாயத்தின் பாதையில் இந்தியா பயணித்தே ஆக வேண்டும் என்று PM மோடி வலியுறுத்தியுள்ளார். ரசாயனம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட PM மோடி, அதை சரிசெய்வதற்கு இயற்கை விவசாயம் மட்டுமே தீர்வு என்றும் கூறியுள்ளார். மேலும், வேளாண் உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பால் விவசாயிகளுக்கு அதிக ஆதாயம் கிடைத்திருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News November 19, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

இந்த மாதம் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.10 – 23- வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 – ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அனைத்து வகுப்புகளுக்கும் <<18304177>>தேர்வு<<>> <<18304103>>அட்டவணைகள்<<>> ஏற்கெனவே <<18304206>>வெளியாகியுள்ளது<<>> குறிப்பிடத்தக்கது.
News November 19, 2025
இந்த மாதிரி எலுமிச்சை பார்த்திருக்கீங்களா?

எலுமிச்சை, இந்தியாவில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதோடு, உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருமானத்தைத் தருகிறது. இந்த எலுமிச்சையில் பல வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? சில வகைகளை பார்க்கும்போது, இப்படியெல்லாம் எலுமிச்சை இருக்கிறதா என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


