News April 19, 2024
ஒரே பெயரில் பல வேட்பாளர்களால் குழப்பம்

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக களம் இறங்கினார். அவரை எதிர்த்து அதே பெயரில் பல பன்னீர்செல்வங்கள் களம் இறங்கியதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், வாக்கு இயந்திரத்தில் அடுத்தடுத்து ஓ.பன்னீசெல்வம் என்று பெயர்கள் இடம்பெற்றிருப்பது மக்களை குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Similar News
News November 16, 2025
ஆஸ்கருக்குள் நுழைந்த தமிழ் படம்

ஆஸ்கர் 2026 திரையிடலுக்கு, ‘கெவி’ படம் தேர்வாகியுள்ளது. அடிப்படை வசதிகளற்ற மலைவாழ் கிராமத்தினரின் வாழ்க்கையில் உள்ள அரசியல், ஆதிக்கம், வாழ்வாதார போராட்டம் ஆகியவற்றை மிகவும் உணர்வுப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியது. இப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. <<18297184>>பா.ரஞ்சித்<<>> தயாரித்த ‘தலித் சுப்பையா: வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ ஆவணப்படமும் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
News November 16, 2025
திமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திமுக கூட்டணியில் தமிழ் புலிகள் கட்சி இணைவதாக அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பாதுகாக்க திமுகவுடன் கைகோர்ப்பதாகவும், 2026 தேர்தலில் 5 தொகுதிகளுக்கு மேல் கேட்போம் எனவும் கூறியுள்ளார். மேலும், தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஜன.3-ம் தேதி ஈரோட்டில் நடக்கவிருக்கும் ‘வெல்லும் தமிழ்நாடு’ மாநாட்டில் உதயநிதி பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
நீட் விலக்கு மசோதா: தமிழக அரசு SC-ல் மனு

2021-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை, 2022-ல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இதற்கு ஒப்புதல் வழங்க ஜனாதிபதி மறுத்தார். இந்நிலையில், நிராகரித்ததற்கான காரணம் தெரிவிக்காமல், சுமார் 1,400 நாள்களுக்கும் மேலாக ஜனாதிபதி ஒப்புதல் வழங்காமல் உள்ளதாக கூறி, இதற்கான ஒப்புதலை SC-யே வழங்க கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.


