News April 14, 2025

பாமகவில் வெடித்த மோதல்

image

பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த பொருளாளர் திலகபாமாவுக்கு எதிராக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர் என்றும், கட்சியில் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஏதும் அறியாதவர் என்றும் விமர்சித்துள்ளார். அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு திலகபாமா என்றும் அவர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Similar News

News April 16, 2025

ராசி பலன்கள் (16.04.2025)

image

➤மேஷம் – சாந்தம் ➤ரிஷபம் – சிரமம் ➤மிதுனம் – களிப்பு ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – பகை ➤கன்னி – வரவு ➤துலாம் – ஆர்வம் ➤விருச்சிகம் – பிரீதி ➤தனுசு – கவனம் ➤மகரம் – உழைப்பு ➤கும்பம் – யோகம் ➤மீனம் – பணிவு.

News April 16, 2025

கேப்டன்சியில் அசத்தும் ஷ்ரேயஸ்

image

கடந்த ஐபிஎல் சீசனில் KKR அணிக்கு கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர், நடப்பு ஆண்டு பஞ்சாப்பை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். குறிப்பாக, இன்றைய த்ரில் போட்டியில் ஷ்ரேயசின் கேப்டன்சி முடிவுகள் பாராட்டுகளை பெறுகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, பவுலர்களை கச்சிதமாக பயன்படுத்தியது, குறைவான ரன்கள் என்றாலும் வெற்றிகரமாக defend செய்தது என்று அவர் கலக்கியிருக்கிறார்.

News April 16, 2025

மெரினா கடற்கரைக்கு கட்டணமா? ஏன்?

image

மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆணையர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார். மேலும் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!