News April 8, 2024
‘போட்’ பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு

போட் (Boat) நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களின் தகவல்கள் கசிந்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்மார்ட் வாட்ச், ப்ளூ டூத் ஸ்பீக்கர், ஹெட்போன், இயர்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை போட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்திய 75 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததை, ஷாப்பிஃபை கை (Shopify GUY) என்ற ஹேக்கர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News March 15, 2026
விஜய்யை திசைதிருப்ப திமுக திட்டமா?

<<19382831>>லயோலாவின் IPDS<<>> நடத்திய கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் மத்தியில் திமுகவை, தவெக விஞ்சிவிட்டதாக முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம், அரசியல் களம் மட்டுமின்றி SM-ல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA-வுடன் விஜய் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதை திசைதிருப்பி தனித்து களம் காணும் ஆசையை மேம்படுத்தவே ‘இந்த திணிப்பை’ திமுக திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News March 15, 2026
இவர்களுக்கு கேஸ் சிலிண்டர் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு

PNG(Piped Natural Gas) இணைப்புகளுடன் கூடிய வீடுகளுக்கு LPG சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. PNG வசதியை பயன்படுத்துவோர் தங்களது வீட்டு உபயோகத்திற்காக LPG சிலிண்டர்களை பெறுவது முறையல்ல என்றும், அப்படி பயன்படுத்தினால் LPG-யை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. TN-ல் சென்னை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 1.32 லட்சம் வீடுகள் PNG பயன்படுத்துகின்றன.
News March 15, 2026
CPI-க்கு 5 சீட்? இன்று இறுதி முடிவு

TN தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – CPI இன்று 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் CPI வெற்றிபெற்றது. இதனால், இந்த முறை 5 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என திமுக கூறுவதால் இழுபறி நீடித்து வருகிறது. எனினும், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், தொகுதி உடன்படிக்கை எட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


