News October 6, 2025
தலைமை நீதிபதியை தாக்கியவர் வாக்குமூலம்

SC-யின் தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசி தாக்கமுயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை டெல்லி போலீஸ் கைது செய்தனர். அவரை விசாரித்தபோது, மத உணர்வுகளை பாதிக்கும் விதமாக CJI பேசியதால் தான் இப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். கஜுராஹோ கோயிலில் துண்டிக்கப்பட்ட விஷ்ணு சிலையின் தலையை மீண்டும் நிறுவக் கோரிய வழக்கில், ’கடவுளிடமே கேளுங்கள்’ என CJI சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 6, 2025
தீபாவளி பரிசாக ₹2,000.. அரசு ஏற்பாடு

PM KISAN திட்டத்தின் 21-வது தவணை தொகையை(₹2,000) தீபாவளிக்கு முன்பே வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், இமாச்சல், உத்தராகண்ட் மாநில விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளோர் KYC அப்டேட் செய்திருந்தால் தீபாவளிக்கு முன்பு பணம் வரவு வைக்கப்படுமாம். அதனால், KYC அப்டேட் செய்யாதவர்கள் <
News October 6, 2025
இந்திய பாரா தடகள வீரர்களுக்கு PM மோடி வாழ்த்து

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 6 தங்கத்துடன் 22 பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், PM மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வெற்றியாளர்களின் சாதனை மற்றவர்களுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் எனவும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார். போட்டியில் பங்கேற்ற கிட்டத்தட்ட 100 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News October 6, 2025
BREAKING: விஜய் அதிரடி முடிவு

தவெக முக்கிய நிர்வாகிகள் N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆக்டிவாக இல்லாததால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருகிறார். இந்நிலையில், அவரது நெருங்கிய நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர்களாக இருந்த நம்பிக்கையானவர்களை கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களாக நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கரூரில் பாதிக்கப்பட்டோரிடம் அவர் முதற்கட்டமாக வீடியோ காலில் பேச முடிவெடித்துள்ளாராம்.