News June 22, 2024
ஒரு சொட்டு கூட குடித்ததில்லை என வாக்குமூலம்?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததை அடுத்து, சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி, அவரது சகோதரர் தாமோதரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கண்ணுக்குட்டியிடம் நடத்திய விசாரணையில், இதுவரை தான் ஒரு சொட்டு கூட சாராயம் குடித்தது இல்லை எனவும், தனது தம்பி தாமோதரன் தான் டேஸ்ட் செய்து சொல்வார் எனவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 16, 2025
ASIA CUP: சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

இன்னும் ஒரு போட்டி மிச்சமிருக்கும் நிலையிலும், ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி அட்வான்ஸாக முன்னேறியுள்ளது. ஓமனுக்கு எதிரான போட்டியில் UAE வென்ற நிலையில், இந்திய அணிக்கான ரூட் கிளியரானது. முன்னதாக, UAE மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து சிறப்பான ரன்ரேட் (4.793) அடிப்படையில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
News September 16, 2025
ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

*தனது ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன், பொய் சொல்ல முயற்சி செய்யக் கூடாது. *சிறு துன்பங்கள் வாய்திறந்து பேசும். பெருந்துன்பங்கள் ஊமையாக்கும். *சுகபோகத்தில் வளர்பவர்கள் எப்போதும் ஆணவம், கர்வம், பொய் வேஷம் இவற்றில் திறமை பெற்றவர்களாக விளங்குகிறார்கள். *நிகழ் காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்திய துக்கம், பயன், நம்பிக்கை என்னும் கயிறுகளில் ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.
News September 16, 2025
இந்தியா முழுவதும் SIR? அக்.7-ல் தீர்ப்பு

பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்த்திருத்த (SIR), நடைமுறைகளில் முறைகேடு கண்டறியப்பட்டால், அதை முழுமையாக ரத்து செய்ய நேரிடும் என சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. மேலும், இது தொடர்பாக வரும் அக்.7-ல் இறுதி விசாரணை நடைபெறும் எனவும், அது இந்தியா முழுமைக்கும் SIR மேற்கொள்ளப்படுமா என்பதற்கான உத்தரவாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.