News February 28, 2025
ஆம்னி பஸ்ஸில் கிடந்த ஆணுறைகள், உள்ளாடைகள்!

புனேவில் உள்ள ஸ்வார்கேட் பஸ் ஸ்டாண்டில் இளம்பெண் ரேப் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள், அந்த பஸ் ஸ்டாண்டில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களில் ஆணுறைகள், உள்ளாடைகள், மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கும், சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பதற்கும் இதுவே சாட்சி என சிவசேனா (UBT) கடுமையாக விமர்சித்துள்ளது.
Similar News
News February 28, 2025
இன்றே கடைசி நாள்.. ரயில்வேயில் 1,036 Vacancy!

ரயில்வேயில் RRBயின் மூலமாக 1,036 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதுகலை ஆசிரியர்கள், தலைமை சட்ட உதவியாளர், பொது வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழி மூலம் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வேலைக்கேற்ப ₹35,400 – ₹47,900 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
News February 28, 2025
11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் தென்தமிழகம், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
News February 28, 2025
ஜனநாயகன் VS பராசக்தி: சினிமாவிலும் அரசியல்?

‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள் 2026 பொங்கலில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கடைசி படம் பொங்கலுக்கு வெளியானால், அது அடுத்து நடைபெறும் தேர்தலுக்கு பயன்படும் என விஜய் தரப்பு நம்புகிறதாம். இதனால், தனது பட ரிலீஸை ஒத்திவைக்க SK முயற்சித்தும், அதற்கு வெளியீட்டு நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மறுத்துவிட்டதாம். மேலும், அப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.