News January 1, 2025
புத்தாண்டில் உச்சம் தொட்ட Condom விற்பனை

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணி வரை மட்டும் 4779 ஆணுறைகள் விற்பனையானதாக Swiggy Instamart தெரிவித்துள்ளது. இது கடந்த காதலர் தினத்தை விடவும் அதிக விற்பனையாம். Swiggy Instamart அதிகளவில் விற்பனையான டாப் 5ல் பால், சிப்ஸ், சாக்லேட், திராட்சை, பன்னீர் ஆகியவை இடம்பெற்றன. இருப்பினும் விற்பனையில் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத்தை விட சென்னை பின்தங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
ஆட்டுக்குடலை சுத்தம் செய்ய ஈஸி டிப்ஸ்

*குடல் பையில் இருந்து சிறுகுடல், பெருங்குடலை வெளியில் எடுங்கள்.
*குடலினுள் ஒரு குச்சியை நுழைத்தோ (அ) கைவிரலை நுழைத்தோ, குடலின் உள்புறத்தை வெளியில் எடுங்கள்.
*நன்றாக குடலை அழுத்தி கழிவை வெளியேற்றிவிடுங்கள்.
*பச்சை தண்ணீரில் 3-5 முறை கழுவுங்கள்.
*சூடான நீரில் சிறிது உப்புக்கல்லை போட்டு 5 முறை கழுவுங்கள். *குடலை கழுவ 35-55 நிமிடங்களாவது எடுத்தால், சாப்பிடும்போது மணம் நன்றாக இருக்கும். Share it
News October 25, 2025
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு அரசு பணி வழங்க கோரிக்கை

ஆசிய கபடி போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்த துணை கேப்டனும், கண்ணகி நகரைச் சேர்ந்தவருமான கார்த்திகாவிற்கு, அரசு பணியோடு கூடிய பரிசுத்தொகை வழங்க வேண்டும் என பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். மேலும், கண்ணகி நகரில் அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட கபடி மைதானத்தை ஏற்படுத்தி தர வேண்டும். தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News October 25, 2025
இந்தியாவில் மட்டுமே இருக்கும் விலங்குகள்

இந்தியா பல்வேறு வகையான வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வனவிலங்குகளுக்கு தாயகமாகும். பூமியில் வேறு எங்கும் காணப்படாத வனவிலங்குகள் இந்தியாவில் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த வனவிலங்கு ஏதேனும் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.


