News April 8, 2024
பிரதமரின் ரோடு ஷோவுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பட்டாசு வெடிக்கக் கூடாது, அலங்கார வளைவுகள் அமைக்கக்கூடாது, வெறுப்புணர்வை தூண்டும் வகையில், மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் முழக்கம் எழுப்பக் கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும், பேனர், கட் அவுட்டுகள் கண்டிப்பாக வைக்கக்கூடாது, பதாகைகளை ஏந்திச்செல்லகூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

இனி தனித்தே போட்டி: மாயாவதி

2027 உ.பி., சட்டமன்ற தேர்தல் உள்பட இனிவரும் அனைத்து தேர்தல்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடிய அவர், கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது, தங்கள் கட்சி வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு முழுமையாக சென்றன. ஆனால் மற்ற கட்சிகளின் வாக்குகள் தங்களுக்கு வரவில்லை என்றவர், அதனால் BSP இனி தனித்தே களம் காணும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.