News October 10, 2025
டிரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க கண்டிஷன்

நீண்ட தூரம் சென்று தாக்கும் Tomahawk ஏவுகணைகளை வழங்கினால், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப்பை பரிந்துரைக்க தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதேபோல், ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தானும் டிரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. இன்று மாலை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 10, 2025
₹50 கட்டினால் போதும், ₹35 லட்சம் வரை கிடைக்கும் திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் தினமும் 19 வயதிலிருந்து ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 10, 2025
TN போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவராது: தவெக

TN போலீஸை மட்டுமே வைத்து அமைக்கப்பட்டுள்ள SIT மூலம் உண்மை வெளிவராது என SC-யில் தவெக கூறியுள்ளது. SIT விசாரணையை எதிர்க்கவில்லை என வாதாடிய தவெக தரப்பு, காவல்துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து SIT அமைத்ததை எதிர்க்கிறோம் என தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், கரூர் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
News October 10, 2025
இந்த ஆப்’லாம் இருக்கு: இனி Queue எதற்கு!

உலகமே நவீனமயமாகி விட்ட நிலையில், அரசும் அதற்கேற்ப பல மக்கள் சேவைகளில் மாற்றங்களை செய்து வருகிறது. ஒரு காலத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்க, தொலைந்து போன டிரைவர் லைசன்ஸ் போன்றவற்றை பெற அரசு அலுவலகத்திற்கு நடையோ நடை’னு நடக்க வேண்டும். ஆனால், டிஜிட்டல் இந்தியாவில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆப்கள், உங்களின் தினசரி வேலைகளுக்கு அதிக அளவில் உதவும். SHARE IT.