News April 14, 2024

குறைந்த வாடகையில் கான்க்ரீட் வீடு

image

சாலையோரம் வசிப்பவர்களுக்கு குறைந்த வாடகையில் கான்க்ரீட் வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவைகள் கொண்டுவரப்படும், கிராமங்களில் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என கூறினார். மேலும், நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News February 10, 2026

EPS கோரிக்கையால் மோடி ராஜதந்திரம்

image

இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் மூலம் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் EPS தொடர் கோரிக்கை வைத்தார். தற்போது மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால், திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருப்பார்கள்; மக்களின் வாழ்வாதாரமும் சிறப்பாக இருக்கும் என்றார்.

News February 10, 2026

பியூஷ் கோயல் மீது திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

image

மாநிலங்களவையில் பியூஷ் கோயல் மீது திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் பேசியது நாடாளுமன்ற மரபுகளையும், அவையின் உரிமையும் மீறும் செயல் என அவர் கூறியுள்ளார்.

News February 10, 2026

4-வது நாளே பிரேமலதா அதிர்ச்சி

image

கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால், தேமுதிக அலுவலகம் வெறிச்சோடியது. பிப்.12-க்குள் மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், 4-வது நாளான நேற்று (பிப்.9) விருப்ப மனுவை வாங்க ஒருவர் கூட வரவில்லை என்பதால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

error: Content is protected !!