News January 30, 2026

CONCERT போல கூட்டம் நடத்துகிறார் விஜய்

image

ஒரு நடிகராக சமூகத்தை விட்டு விலகியிருக்க முடியும்; ஆனால், அரசியலுக்கு வந்த பிறகும் அதே போக்கை தொடரலாம் என விஜய் நினைப்பது சரியல்ல என்று கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். தனியார் TV நிகழ்ச்சியில் பேசிய அவர், Concert நடத்துவது போல கூட்டங்களை நடத்திவிட்டு, மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புவது தவறு; தவெகவுக்கு வாக்குகள் கிடைக்கும்; ஆனால், வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு. உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

News February 9, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 9, 2026

திமுக – காங்., பேச்சுவார்த்தை எப்போது? கார்த்தி சிதம்பரம்

image

கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளால் திமுக – காங்., கூட்டணி பேச்சுவார்த்தை சிக்கலில் உள்ளது. இந்நிலையில், சிறு சிறு எதிர்பார்ப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தையின் போது சரிசெய்யப்படும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தயாராகவே உள்ளதாகவும், ஆனால் திமுகதான் இதுவரை குழுவை அமைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!