News December 24, 2024

கட்டாய தேர்ச்சி முறை தொடர வேண்டும்: ராமதாஸ்

image

மத்திய அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது மிகவும் தவறான முடிவு என சுட்டிக்காட்டிய அவர், இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடும் எனக் கூறியுள்ளார். ஏழை மாணவர்கள் கல்வி சுதந்திரம் பெறும் வரை கட்டாய தேர்ச்சி முறை தொடர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News July 7, 2025

விவசாயிகள், நெசவாளர்களின் குறைகளை கேட்ட இபிஎஸ்!

image

2026 தேர்தலுக்காக தனது சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்து தொடங்கியுள்ளார் <<16973576>>இபிஎஸ்<<>>. இந்நிலையில், தேக்கம்பட்டியில் விவசாயிகள், நெசவாளர்கள் & செங்கல் உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். இதில், SP வேலுமணி உள்ளிட்ட பல அதிமுக மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக தொடங்கியுள்ள இந்த சுற்றுப்பயணம் தேர்தலில் எதிரொலிக்குமா?

News July 7, 2025

திமுக ஐடி விங்கில் இணையும் டாக்டர் அழகுராஜா!

image

திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளராக டாக்டர் அழகுராஜாவை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதிய வியூகங்களுடன் திமுக களமிறங்குகிறது. குறிப்பாக சோசியல் மீடியாக்களில் அரசின் திட்டங்கள், அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வதந்திகளை மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என ஐடி விங்கிற்கு தலைமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

News July 7, 2025

தொடர் உயிரிழப்புகள்.. காந்தாரா 1 போஸ்டர் ரிலீஸ்

image

ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை ஒட்டி, ‘காந்தாரா சாப்டர் 1’ பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தீப்பிழம்புகளுக்கு நடுவே ரிஷப் ஆவேசமாக இருக்கும்படியாக அப்போஸ்டர் அமைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த பட ஷூட்டிங்கில் அடுத்தடுத்து ஏற்பட்ட உயிரிழப்புகளும் கேள்விக்குள்ளாகியுள்ளது. 3 பேர் ஷூட்டிங்கின்போது மாரடைப்பு காரணமாக உயிரிழக்க, ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!