News June 9, 2024

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் நிறைவு

image

சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல், பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்றாகும். அந்த சீரியல் நேற்றிரவுடன் நிறைவு பெற்றுள்ளது. கடைசி நாளான நேற்றைய எபிசோடு உணர்ச்சிமயமாக இருந்தது. குணசேகரனாக நடித்த வேலராமமூர்த்தி கொலை வழக்கில் கைது, சகோதரர்கள் மீண்டும் இணைந்தது, கொலையானதாக கூறப்பட்ட பாட்டி உயிரோடு வந்து அறிவுரை வழங்கியது என திருப்பங்களுடன் நிறைவு பெற்றது.

Similar News

News September 2, 2025

விமர்சனம் கழுத்தை துண்டிக்க கூடாது: மிஷ்கின் வருத்தம்

image

திரை விமர்சனம் என்பது ஒரு கலைஞனின் கழுத்தை துண்டிப்பது போல் இருக்கக்கூடாது என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார். சினிமா விமர்சனங்கள் படங்களின் வியாபாரத்தை கெடுப்பதால், தயாரிப்பாளர்கள் பல நேரங்களில் தடுமாறுவதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் மிஷ்கின் இவ்வாறு கூறியுள்ளார். இருப்பினும், விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News September 2, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 446 ▶குறள்: தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். ▶ பொருள்: அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.

News September 2, 2025

இந்தியா வந்ததும் PM போட்ட போன் கால்

image

பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், ஜப்பான், சீனா சென்றுவிட்டு தாயகம் திரும்பிய PM மோடி, பஞ்சாப் CM பகவந்த் மான் சிங் உடன் தொலைபேசியில் நிலவரம் குறித்து கேட்டுள்ளார். வெள்ள பாதிப்புகள், நிவாரணம், மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், மத்திய அரசு துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!