News March 28, 2024
வேட்புமனு பரிசீலனை நிறைவு

தமிழ்நாட்டில் வேட்புமனு பரிசீலனை 3 மணியுடன் நிறைவு பெற்றது. 39 தொகுதிகளுக்கு மொத்தம் 1403 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
Similar News
News January 11, 2026
நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

பிஹார் CM நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக JD(U) MP கேசி தியாகி PM மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானும் இதை வலியுறுத்தியுள்ளார். இந்த பட்டியலில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப்பும் இணைந்துள்ளார். மேலும், நிதிஷ்குமாருக்கு கொடுத்தால் தனது தந்தைக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 11, 2026
வெனிசுலாவின் எண்ணெய் காசு US கட்டுப்பாட்டில் சென்றது!

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தில் இருந்து ஈட்டப்படும் வருவாய், தற்போது முழுக்க முழுக்க அமெரிக்க கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளில் இருந்தும் அந்த நிதியை பறிமுதல் செய்ய முடியாத வகையில் முக்கிய உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெனிசுலாவின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
News January 11, 2026
அடுத்த மெகா விற்பனையை அறிவித்த நிறுவனங்கள்

அமேசானும், பிளிப்கார்ட்டும் அடுத்த பெரிய விற்பனைக்கு தயாராகி வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 16-ம் தேதி ‘Great Republic Day Sale’-ஐ தொடங்க உள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. டிவி, போன்கள், லேப்டாப்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.


