News August 2, 2024

பூரண மதுவிலக்கு வேண்டும்: துரை வைகோ

image

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென்று மதிமுக எம்பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். மதுவிலக்கு குறித்த மதிமுகவின் நிலைப்பாடு குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த துரை வைகோ, தமிழக அரசின் நிதிச்சூழல் அனுமதிக்காத காரணத்தால்தான், படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டுமென கூறியதாகவும், ஆனால் மதுவிலக்கு என்பதுதான் மதிமுகவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

Similar News

News August 14, 2025

நயினாரிடமே கேளுங்கள்.. கூட்டணியில் குழப்பம்?

image

பாஜகவுடன் மீண்டும் அதிமுக கைகோர்த்தது முதலே ‘கூட்டணி ஆட்சி’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் இரு கட்சிகளிடையே உரசல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், TTV தினகரனும் EPS-ம் ஒன்றாக மேடையேறுவர் என நயினார் நாகேந்திரன் கூறினார். இது நடக்குமா என்ற கேள்விக்கு, நயினாரிடமே கேளுங்கள் எனக் கூறியுள்ளார் EPS. எனவே, அதிமுக – பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் முற்றுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News August 14, 2025

ரஜினி மீதான வியப்பு குறையவே இல்லை: ஷங்கர்

image

ரஜினி திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் ஷங்கர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 50 வருடங்களாக ரஜினி மீதான வியப்பு ஒரு நொடியும் குறையாமல் தொடர்வதாகவும், எந்த மனிதரின் நேர்மறை சிந்தனையும் 50 அடி தூரத்தில் பரவும், ஆனால் ரஜினியின் நேர்மறை சிந்தனை உலகையே சூழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘அரங்கம் அதிரட்டும்’ என ‘கூலி’ படத்தையும் வாழ்த்தியுள்ளார்.

News August 14, 2025

தொப்பை குறைய உதவும் பாலாசனம்!

image

✦முதுகு, கழுத்து, வயிற்றுப்பகுதி வலுவடைந்து, தொப்பை குறையும்.
✦2 கால்களையும் மடக்கி, கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணையும் படி அமருங்கள்
➥மூச்சை உள்ளிழுத்து, இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்குங்கள். மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, நெற்றி தரையில் படும் படி குனியுங்கள்.
➥15- 20 விநாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு, மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.

error: Content is protected !!