News April 17, 2024
டெலிவரி நிறுவனங்கள் மீது புகார்

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஃபிளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்கள் டெலிவரி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், தகுதியான ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்போம் என அந்நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
Similar News
News January 17, 2026
ஜல்லிக்கட்டு திமுக குடும்ப விழாவா? ஆர்.பி.உதயகுமார்

உதயநிதி வருகைக்காக, நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு 2 மணி நேரம் தாமதம் செய்யப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆர்.பி.உதயகுமார், ஜல்லிக்கட்டு விழாவை திமுகவின் குடும்ப விழாவாக மாற்றிவிட்டதாக விமர்சித்தார். எத்தனை நாள்களுக்குத்தான் மக்கள் பொறுத்திருப்பார்கள்; ஜல்லிக்கட்டு வாடிவாசலை திறக்க இளவரசர், மன்னர் வரும் வரை மக்கள் காத்திருக்க வேண்டுமா என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
News January 17, 2026
FLASH: தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $23(இந்திய மதிப்பில் ₹2,087) குறைந்து $4,596-க்கு விற்பனையாகிறது. நேற்று $25 குறைந்திருந்த நிலையில், இந்திய சந்தையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்தது. இதனால், இன்றும்(ஜன.17) காலை 9 மணிக்கு இந்திய சந்தையில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
News January 17, 2026
காங்., நிர்வாகிகளுடன் டெல்லி தலைமை ஆலோசனை

ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்., கட்சியினர், தவெக பக்கம் செல்ல விரும்புவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லி தலைமை இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் ராகுல், கார்கே பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


