News March 21, 2025

ரேஷன் கடைகளில் புகார் பதிவேடுகள்

image

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களின் வசதிக்காக புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 37,299 ரேஷன் கடைகளில் இந்த பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள் நடந்தாலோ, உணவுப் பொருட்கள் எடை குறைவாக அளந்து விநியோகித்தாலோ மக்கள் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம். மேலும், 1967, 18004245901 என்ற கட்டணமில்லா எண்களிலும் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Similar News

News September 15, 2025

4 முறை கர்ப்பமாக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!

image

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 4 முறை கர்ப்பமாக்கியதாக ஜாய் கிரிசில்டா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 2 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பமாக்கிவிட்டு அதனை கருக்கலைப்பு செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர், தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என கிரிசில்டா வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோத கருக்கலைப்பு விவகாரத்திலும் மாதம்பட்டி சிக்குவாரா?

News September 15, 2025

BREAKING: முடிவை மாற்றினார் இபிஎஸ்

image

செங்கோட்டையன் விவகாரத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை EPS ஆலோசிக்கவுள்ளதாக செய்தி பரவியது. இதனால், அவர் தனது தேர்தல் பரப்புரை பயணத்தை மாற்றியமைக்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமித்ஷாவை சந்திக்கும் பிளான் இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம் என்றும், மழை காரணமாகவே பரப்புரை பயணம் ஒத்திவைக்கப் பட்டதாகவும் EPS விளக்கம் அளித்துள்ளார்.

News September 15, 2025

Parenting: காய்ச்சலின் போது குழந்தைகள் குளிக்கலாமா?

image

குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்படும்போது குளிக்கலாமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. காய்ச்சலின் போது, ​​உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் உடல் சூட்டை தணிக்கவும், உடலில் சேரும் பாக்டீரியாக்களை நீக்கவும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஒருவேளை குளிக்கமுடியாத பட்சத்தில், குழந்தைகளில் உடலை வெதுவெதுப்பான நீரில் துடைப்பது நல்லது. SHARE.

error: Content is protected !!