News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News January 1, 2026
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி-யாக P.சாமிநாதன் பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணை தலைவராக P.சாமிநாதன் இன்று பொறுப்பேற்று கொண்டார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் மற்றும் மாவட்ட பயிற்சி காவல் கண்காணிப்பாளர் நேகா ஆகியோர் காவல்துறை துணைத் தலைவர் அவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
News January 1, 2026
புத்தாண்டில் கைதான போலி தீர்க்கதரிசி!

2025 டிச.25-ம் தேதி உலகம் அழியும் என பீதியை கிளப்பிய எபோ நோவா என்பவரை கானா போலீஸ் கைது செய்துள்ளது. தன்னை தீர்க்கதரிசி என்றும், தான் கட்டி வரும் படகில் ஏறினால் தப்பிக்கலாம் என்றும் கூறி நிதி திரட்டினார். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. மேலும் மக்களிடம் திரட்டிய நிதியில் ஆடம்பர கார் வாங்கியது சர்ச்சையானது. இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி நோவா இன்று கைதாகியுள்ளார்.
News January 1, 2026
இது ஜெயிலா? ஹோட்டலா?

நார்வேவின் ஹால்டன் ஜெயில், நவீன வசதிகளுடன் சொகுசு ஹோட்டல் போல் இருக்கிறது. இந்த ஜெயிலில், கடுமையான தண்டனையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக கைதிகளின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கு காணப்படும் திறந்தவெளி பகுதிகள், குற்றங்களை மீண்டும் செய்வதைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே உள்ள ஜெயிலின் போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


