News March 18, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு பெட்டி

image

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டு இன்று கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த புகார் மனுக்களை போட்டு சென்றனர்.

Similar News

News January 19, 2026

கடலூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி சாவு

image

கீரப்பாளையம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் குருசாமி (63) நேற்று கீரப்பாளையத்தில் இருந்து புவனகிரி நோக்கி வெள்ளாற்று பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பைக் ஓட்டிய வினோத் குமார் (25) என்பவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

கடலூர்: டாஸ்மாக் பாரில் கொலை வெறி தாக்குதல்

image

வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் அமர்ந்து நேற்று (ஜன.18) ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், சுபாஷ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், மது பாட்டிலை உடைத்து ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 18, 2026

கடலூர்: நடமாடும் உணவகம் அமைக்க மானியம்

image

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!

error: Content is protected !!