News August 29, 2024
‘தி கோட்’ படத்திற்கு எதிராக புகார்

‘தி கோட்’ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் தேவராஜன் அளித்துள்ள அந்த புகாரில், அனுமதியின்றி ‘தி கோட்’ படம் 6 காட்சிகள் திரையிடப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறும் தியேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார். இப்படம் செப்.5இல் வெளியாக உள்ளது.
Similar News
News August 20, 2025
ஏன் இந்தியா மீது கூடுதல் வரி? USA சொன்ன ஷாக் காரணம்

இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளது USA. இதுதொடர்பாக ஆக.25-ல் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையும் ரத்தானது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது டிரம்ப் அரசு கூடுதல் வரி விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். NATO உள்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இதற்கு ஆதரவளித்துள்ளதாகவும் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டில் மீண்டும் பெரிய விபத்து

தவெக மாநாட்டில் பிற்பகலில் <<17463695>>கொடிக்கம்பம் விழுந்து<<>> கார் சேதமடைந்த விபத்தை தொடர்ந்து மற்றொரு விபத்து அரங்கேறியுள்ளது. மாநாட்டு திடலின் பிரதான நுழைவு வாயிலில் ராட்சத போக்கஸ் லைட்டுகள் கட்டப்பட்ட கம்பம் கீழே விழுந்து கண்ணாடி துண்டுகள் சிதறின. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மாநாட்டு ஏற்பாடுகளை கூடுதல் கவனத்துடன் செய்ய விஜய் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 20, 2025
Prayer-க்கு வரலையா? ஜெயில் கன்ஃபார்ம்.. வினோத சட்டம்

மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் வெள்ளிக்கிழமைகளில் மசூதிக்கு வராவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹53,422 – ₹61,794 அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் இருந்து விடுபட முடியும் எனவும் ஆளும் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமிக் கட்சி எச்சரித்துள்ளது. இந்த சட்டத்த பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?