News March 19, 2024
பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

கோவை சாலைப் பேரணியில் தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாரளித்துள்ளது. இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், பிரதமரின் சாலைப் பேரணியில் 6 – 8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் எனக் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
மாணவர்களுக்கு மாதம் ₹10,000 ஊக்கத்தொகை

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை அரசு உயர்த்தியுள்ளது. முழுநேரமாக பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத் தொகை 4,000-ல் இருந்து 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பகுதிநேரமாக பயிலும் மாணவர்களுக்கான தொகை 5,000 ஆக (முன்பு 2,000) அதிகரிக்கப்பட்டுள்ளது. <
News November 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 10, ஐப்பசி 24 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:30 AM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அனுஷம். ▶சிறப்பு: முகூர்த்த நாள், திங்கள் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: நெய் தீபம் ஏற்றி வராகி அம்மனை வழிபடுதல்.
News November 10, 2025
டி20 உலகக்கோப்பை இங்கு தான் நடைபெறுகிறதா?

ICC டி20 உலகக்கோப்பை நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மும்பை, டெல்லி, சென்னை, அகமதாபாத், கொல்கத்தா மற்றும் இலங்கையில் உள்ள கொழும்பு, கண்டி மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. செமிஃபைனல் அகமதாபாத், கொல்கத்தாவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இலங்கை (அ) பாகிஸ்தான் தேர்வானால், பைனல் இலங்கையில் நடைபெறும்.


