News September 21, 2024

ஜெகன் மோகனுக்கு எதிராக சென்னையில் புகார்

image

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஜெகநாத் என்பவர் புகார் அளித்துள்ளார். ஜெகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி, சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

எல்லாராலும் MGR ஆக முடியாது: விஜய் பற்றி ஜெயக்குமார்

image

தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் எம்ஜிஆர் குறித்து விஜய் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய EX அமைச்சர் ஜெயக்குமார், இது ஒரு தேர்தல் யுக்தி என்றும், வாக்குகளை பெறுவதற்காக அண்ணா, எம்ஜிஆர் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துவதாக விமர்சித்தார். எல்லோராலும் MGR, ஜெயலலிதா ஆகிவிட முடியாது எனக் கூறிய அவர், இரட்டை இலைக்கு வாக்களித்த கை, ஒரு காலத்திலும் வேறு கட்சிக்கு வாக்களிக்காது என்றார்.

News August 22, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 435 ▶குறள்: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். ▶ பொருள்: முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

News August 22, 2025

வரலாற்று சாதனைக்காக காத்திருக்கும் அர்ஷ்தீப்

image

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 63 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டி20களில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக முதலிடத்தில் உள்ளார். இச்சூழலில் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் படைப்பார்.

error: Content is protected !!