News April 9, 2024
முதல்வர் ஸ்டாலின் மீது புகார்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதை குறிப்பிட்ட அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தேர்தல் விதிகளை மீறிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
வேட்புமனு நிராகரிப்பில் இருந்து விஜய் தப்பிக்க இதுதான் வழி

பெரம்பூரில் விஜய் சமர்ப்பித்த வேட்புமனுவில் (<<19552701>>வழக்கு குறிப்பிடாதது<<>>) குளறுபடி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாம். இருப்பினும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் (ஏப்.6) இன்னும் முடிவடையாததால், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதன் மூலம் வேட்புமனு நிராகரிப்பில் இருந்து விஜய் தப்பிக்க முடியும் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
EPS மீது அதிருப்தி.. ஜெ., பற்றி பதிவிட்ட தனபால்

EPS ஆட்சியை காப்பாற்றி தந்த தனக்கு சீட் வழங்கவில்லை என ஆதங்கமாக <<19549090>>பேசிய தனபால்<<>> தற்போது ஜெ., பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 1988-ல் தனக்கு விபத்து ஏற்பட்ட சம்பவத்தை நினைவுக்கூர்ந்த அவர், அப்போது விபத்து நடந்த இடத்திற்கு ஜெ., வந்து, தன்னை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், அம்மாவின் அன்பு தெரிவதாகவும் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
கலகலத்துப் போன ராமதாஸ்.. கட்சியில் இருந்து நீக்கினார்

TN-ஐ தொடர்ந்து புதுச்சேரி தேர்தலிலும் அன்புமணி – ராமதாஸ் இடையிலான மோதல் எதிரொலிக்கிறது. சசிகலாவுடன் கூட்டணி வைத்ததால், அதிருப்தி அடைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள் வேறு கட்சிகளுக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளர் கணபதி உள்ளிட்ட 5 முக்கிய நிர்வாகிகள் அன்புமணியுடன் மீண்டும் இணைந்தனர். இதனால், கலகலத்துப் போன ராமதாஸ் 5 பேரையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.


