News August 26, 2024

1-9 மாணவர்களின் திறனை மேம்படுத்த போட்டிகள்: DSE

image

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம் என பல்வேறு மன்றங்கள் செயல்படுகிறது. இதில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, 2025 ஏப்ரல் வரை வாரந்தோறும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

காசி தமிழ் சங்கத்துக்கு செல்ல 7 சிறப்பு ரயில்கள்

image

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை ஒட்டி தமிழகத்தில் இருந்து, உ.பி., பனாரஸுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் கன்னியாகுமரி (நவ.29,7 ;11.45 AM), சென்னை (டிச., 2, 6,12; 4.15 AM), கோவையில் (டிச., 3,9; 11.15 AM) இருந்து பனாரஸுக்கு செல்கின்றன. இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கும்.

News November 22, 2025

தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: கனிமொழி

image

ஒவ்வொரு மசோதாக்களின் மூலமாகவும் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே பாஜக அரசு கவனம் செலுத்தி வருவதாக கனிமொழி MP குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களுக்கு சரியான நிதி பகிர்வை வழங்குவதில்லை என குற்றம்சாட்டிய அவர், மெட்ரோ உள்பட நமக்கு வரவேண்டி ரயில் திட்டங்கள் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசை, பாஜக தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், அதனை எதிர்த்து திமுக போராடுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 22, 2025

வரலாற்றில் இன்று

image

➤1939 – உ.பி Ex CM முலாயம் சிங் யாதவ் பிறந்த தினம்.
➤ 1956 – 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் தொடங்கியது.
➤1963 – அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
➤ 1995 – உலகின் முதலாவது கணினி அனிமேஷன் படமான டாய் ஸ்டோரி வெளியானது.
➤ 2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

error: Content is protected !!