News November 24, 2024
பள்ளி, கல்லூரிகளில் போட்டி: CM உத்தரவு

அரசு, அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவன அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் வரும் 26ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இந்த உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு போட்டிகளை நடத்தவும் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News December 21, 2025
திருப்பூரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் நல்லோசை களமாடு கலைக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுடன் காபி வித் கலெக்டர்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
News December 21, 2025
₹4 கோடி தராமல் இழுத்தடித்த தயாரிப்பாளர் மீது SK வழக்கு

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடிக்க ₹15 கோடி சம்பளம் பேசிவிட்டு, ₹11 கோடி மட்டும் கொடுத்து ₹4 கோடியை தராமல் இழுத்தடிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வரும் வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே கடன் பிரச்னையால் <<18539007>>‘வா வாத்தியார்’<<>> படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் ஞானவேல் ராஜா தவிக்கிறார்.
News December 21, 2025
ராசி பலன்கள் (21.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


